டெல்லி மற்றும் தேசியத் தலைநகர் பிராந்தியத்தின் சில பகுதிகளில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் எட்டு வாரங்களுக்குள் அதற்கான பிரத்தியேக தங்குமிடங்களில் தங்க வைக்குமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
விலங்குகள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், 1960 ஆனது, "விலங்குகளுக்கு தேவையற்ற வலி அல்லது துன்பத்தை ஏற்படுத்துவதை" தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ், மத்திய அரசு 2001 ஆம் ஆண்டில் ABC (நாய்கள்) விதிகளை அறிவித்தது.
விலங்குகளின் பிறப்புக் கட்டுப்பாடு விதிகள் 2023 ஆனது, "பிடித்தல், கருத்தடை செய்தல், தடுப்பூசி போடுதல், விடுவித்தல்" என்ற கோட்பாட்டை வழங்குகிறது.
ஒரு நாய் வெறி பிடித்ததாகவோ, குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் வாய்ப் பட்டதாகவோ அல்லது கால்நடை மருத்துவரால் ஆபத்தான முறையில் ஆக்ரோஷமாக இருப்பதாகக் கண்டறியப் பட்டாலோ தவிர, நகராட்சி அமைப்புகள் ஆரோக்கியமான நாய்களை நிரந்தரமாக இடமாற்றம் செய்வதையோ அல்லது நீண்ட காலத்திற்கு அவற்றைப் பிடித்து வைப்பதையோ இது தடை செய்கிறது.