தமிழ்நாடு மாநிலத் தொல்பொருள் துறையானது, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நடுப்பகுதியில் பூம்புகார்-நாகப்பட்டினம் கடற்கரையில் கடலடி ஆய்வினைத் தொடங்க உள்ளது.
நீரில் மூழ்கிக் காணப்படும் எஞ்சிய பாகங்களை ஆராய்ந்து தமிழ்நாட்டின் கடல்சார் வரலாற்றை வெளிக்கொணர்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம், தேசியக் கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தேசியக் கடலியல் கல்வி நிறுவனம் ஆகியவற்றின் நிபுணர்கள் இந்த ஆய்வில் உதவுவார்கள்.
1980 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் நடைபெற்ற முந்தைய ஆய்வுகள் இப்பகுதியில் கடலடி கட்டமைப்புகள் மற்றும் கப்பல் மூழ்கு விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளதை வெளிப்படுத்தின.