TNPSC Thervupettagam

குறைந்தபட்ச ஆதரவு விலையால் தமிழ்நாடு பருத்தி விவசாயிகளுக்கு ஆதாயம்

September 4 , 2025 2 days 54 0
  • இந்தியப் பருத்திக் கழகத்தின் (CCI) குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) சார்ந்த நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் பருத்தி விவசாயிகள் பயனடைவதில்லை.
  • 2021 ஆம் ஆண்டு முதல், விலைகள் குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறையும் போது CCI தமிழக விவசாயிகளிடமிருந்து பருத்தியையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவு இருந்த போதிலும் CCI அவ்வாறு செய்யவில்லை.
  • தமிழ்நாட்டில் பருத்திச் சாகுபடியானது 19 மாவட்டங்களில் சுமார் 70,000 ஹெக்டேர் பரப்பளவில் பரவியிருந்தாலும், பருத்தி விதை நீக்கும் தொழிற்சாலைகள் 100 முதல் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளன.
  • கொள்முதல் மையத்தை அமைப்பதற்கு, ஒரு தாலுக்காவில் குறைந்தபட்சம் 3,000 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடியும் 20 கிலோ மீட்டருக்குள் ஒரு விதை நீக்கும் தொழிற்சாலை இருக்க வேண்டும் என்று CCI கொள்முதல் விதிகள்  கூறுகின்றது.
  • தமிழ்நாட்டில் விதை நீக்கும் தொழிற்சாலைகளுக்கான போக்குவரத்துச் செலவுகள் குவிண்டாலுக்கு சுமார் 500 ரூபாய் ஆகும், ஆனால் விதை நீக்கும் செயல்பாடுகள் போக்குவரத்துச் செலவினங்களை ஈடு கட்டுவதில்லை.
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது, விவசாயிகளுக்கானப் போக்குவரத்துச் செலவினங்களை ஈடுகட்ட உதவுகிறது என்பதோடு, மேலும் பருத்தி விவசாயிகளுக்கு உதவுவதற்காக தமிழ்நாட்டிற்கும் இதே போன்ற ஆதரவு பரிந்துரைக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்