இந்தியப் பிரதமரான நரேந்திர மோடி சென்னை மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள போர்ட் பிளேயர் ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியிலான ஒரு கண்ணாடி இழை வடத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த கடலுக்கடியிலான கண்ணாடி இழை வடமானது போர்ட் பிளேயரிலிருந்து அத்தீவின் சுவராஜ் டிவீப் (ஹாவ்லாக்), லிட்டில் அந்தமான், கார் நிக்கோபர், கம்மோர்டா, கிரேட் நிக்கோபர், பெரும் தீவு மற்றும் ரங்காட் ஆகியவற்றையும் இணைக்க உள்ளது.