சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) ஆகியவை கடல்சார் தொழிலாளர் ஒப்பந்தம் 2006 என்பதின் 20வது ஆண்டு நிறைவைக் கொண்டாடின.
இந்த ஒப்பந்தம் பிப்ரவரி 23, 2006 அன்று ஜெனீவாவில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
இது கடல்சார் தொழிலாளர்களின் உரிமைகள் மசோதா என்று அழைக்கப்படுகிறது.
இது அவர்களுக்கான ஊதியம், வேலை நேரம், தங்குமிடம் மற்றும் மருத்துவப் பராமரிப்புக்கான குறைந்தபட்ச தரநிலைகளை நிர்ணயிக்கிறது.
இது கப்பலின் சொந்த நாடு மற்றும் அது நிற்கும் துறைமுக நாட்டின் அதிகாரிகளால் தரநிலைகள் இணக்கத்திற்காக ஆய்வு செய்யப்படுவதை உறுதி செய்கிறது.