நிலையான கடல்சார் உள்கட்டமைப்பு மற்றும் பெருங்கடல் பொருளாதாரத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக, இந்தியாவின் முதல் நீலப் பத்திரத்தை (Blue bond) சாகர்மாலா பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (SMFCL) நிறுவனம் வெளியிட உள்ளது.
இந்தியாவின் முதல் கடல்சார் துறை சார்ந்த வங்கி சாரா நிதி நிறுவனமான (NBFC) SMFCL, 10 ஆண்டு கடன் பத்திரங்கள் மூலம் ₹600 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது.
நீலப் பத்திரங்கள் என்பவை பெருங்கடல்கள் மற்றும் நீர்வாழ் சூழ்நிலை மண்டலங்களின் நிலையான பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டிற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப் படும் சிறப்புக் கடன் ஆவணங்கள் ஆகும்.
இந்த நிதியானது கடல்சார் கடன், கட்டமைப்புகளுடன் கூடிய துறைமுகத் திட்டங்கள் மற்றும் கடலோர சாலை மேம்பாடு ஆகியவற்றை ஆதரிக்கும்.
2018 ஆம் ஆண்டில் சீஷெல்ஸ் உலகின் முதல் இறையாண்மை நீலப் பத்திரத்தை வெளியிட்டது, அதே நேரத்தில் பெலீஸ் 2021 ஆம் ஆண்டில் கடல் வளப் பாதுகாப்பிற்காக கடனுக்கான பெருங்கடல் பரிமாற்றத்தை (Debt-for-ocean swap) பயன்படுத்தியது.