TNPSC Thervupettagam

கடல் நட்சத்திர மீன் அழிவு நோய்

August 14 , 2025 2 days 30 0
  • விப்ரியோ பெக்டெனிசிடா என்ற பாக்டீரியாவானது கடல் நட்சத்திர மீன் அழிவு நோய்க்குக் காரணம் என்று அறிவியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
  • இந்த நோய் ஆனது, வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பில்லியன் கணக்கான கடல் நட்சத்திர மீன்களைக் கொன்றுள்ளது.
  • இந்த நோய் சூரியகாந்தி வடிவ கடல் நட்சத்திர மீன் உட்பட 20க்கும் மேற்பட்ட உயிரினங்களைப் பாதித்தது. 2013 ஆம் ஆண்டில் தொடங்கி, ஐந்து ஆண்டுகளுக்குள் சூரியகாந்தி வடிவ கடல் நட்சத்திர மீன்களின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்து உள்ளது.
  • இந்த நோயால் பாதிக்கப்பட்ட கடல் நட்சத்திர மீன்களின் உடலில் புண்கள் உருவாகி அவற்றின் கைகள் உதிர்ந்து, அவை உயிரிழக்கின்றன.
  • கடல் நட்சத்திர மீன்கள் ஆனது மீன்கள், கடல் கீரிகள் மற்றும் நீர் நாய்களுக்கு வாழ்விடத்தினை வழங்கும் கெல்ப் காடு சுற்றுச்சூழல் அமைப்புகளில் முக்கியமாகக் காணப்படும் வேட்டையாடும் இனமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்