வட கொரிய நாட்டில் முதலாவது கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப் பட்டதையடுத்து, "கடுமையான தேசிய அவசரநிலையை" அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
2020 முதல் அந்நாட்டு அரசாங்கம் அதன் எல்லைகளில் கடுமையான கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகளை விதித்து இருந்த நிலையில், இந்த நாட்டில் கோவிட்-19 பாதிப்பு ஒரு போதும் பதிவானதில்லை.
வட கொரியா அதன் 25 மில்லியன் மக்களில் யாருக்கும் தடுப்பூசி வழங்கவில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
உலக சுகாதார நிறுவனம், சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை வழங்கிய தடுப்பூசி மீதான சலுகைகளை இந்த நாடு நிராகரித்தது.