பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கடும் குளிரான வானிலையையும் தாங்கக் கூடிய ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்பத்தினை சில இந்திய நிறுவனங்களிடம் ஒப்படைத்து உள்ளது.
இந்த ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்பமானது அதிக உயரத்தில் மேற்கொள்ளப் படும் போர் நடவடிக்கைகளில் நிலவும் வெவ்வேறு பருவநிலைகளிலும் பயன்படுத்தக் கூடிய, பனிச்சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட, 3 அடுக்கிலான தொழில்நுட்ப ஆடை ஆகும்.
இந்திய இராணுவமானது சமீபகாலம் வரையில், உயர்நிலை பகுதிகளில் பணியாற்றி வரும் படைப் பிரிவினருக்காக வேண்டி பல்வேறு சிறப்பு ஆடைகள், மலையேறுதல் உபகரணங்கள் மற்றும் கடும் குளிரைத் தாங்கக் கூடிய பல்வேறு வகை ஆடைகள் ஆகியவற்றை இறக்குமதி செய்து வருகிறது.
பனிப்பாறைகள் மற்றும் இமாலயச் சிகரங்களில் இந்திய இராணுவம் மேற்கொள்ளும் நீடித்த நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப் படும் இந்த கடும் குளிரை தாங்கக் கூடிய வகையிலான ஆடைத் தொழில்நுட்பம் என்பது ஒரு சாத்தியமிக்க இறக்குமதி மாற்றாகத் திகழும்.