ஜம்மு மற்றும் காஷ்மீரில் வீட்டு மனைகள் – இனி எவரும் வாங்கலாம்
January 1 , 2022 1295 days 678 0
முதலாவது ஜம்மு மற்றும் காஷ்மீர் வீட்டு மனை மாநாடானது சமீபத்தில் ஜம்முவில் நடத்தப் பட்டது.
அங்கு உள்ளூர் வீட்டு மனைகளை ‘இரண்டாம் நிலை வீடுகள் மற்றும் கோடைக் கால இல்லங்கள்’ என்ற வகையில் நாட்டின் அனைத்து குடிமகன்களும் வாங்கும் வகையில் வழி செய்வதற்கு மத்திய அரசும் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஒன்றியப் பிரதேச அரசும் முடிவு செய்துள்ளன.
மிகப்பெரிய அளவில் வீட்டு மனை விற்பனை நிறுவனங்களின் முதலீடுகளை அங்கு ஈர்ப்பதற்காக வேண்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் ‘மாநிலத்தின் நிரந்தரக் குடியிருப்பாளர்’ எனும் பிரிவானது ‘தவிர்க்கப்பட்டு‘, ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேராத முதலீட்டாளர்களும் இந்த ஒன்றியப் பிரதேசத்தில் முதலீடு செய்வதற்கு வழிவகுக்கப் பட்டிருக்கிறது.
இதன் விளைவாக, இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் விவசாயம் சாரா நிலத்தினை வாங்க இயலும்.