இந்தியப் பயணிகளுக்காக கயிலை மானசரோவர் யாத்திரை மீண்டும் திறக்கப் படுவதாக சீனா அறிவித்துள்ளதுடன் இதில் 1000 பயணிகளுக்கு மட்டுமே வரையறுக்கப் பட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த யாத்திரைக்காக உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய் மற்றும் சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் வழியாக இரண்டு பயண வழிகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த யாத்திரை இந்தியாவை சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் அமைந்துள்ள கயிலை மலை மற்றும் மானசரோவர் ஏரியுடன் இணைக்கிறது.
பயணிகளின் சீரான இயக்கத்திற்காக இந்தியா மற்றும் சீனா இடையேயான இரு தரப்பு ஒப்பந்தங்களின் கீழ் இந்த யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புவிசார் அரசியல் மற்றும் சுகாதாரம் தொடர்பான காரணங்களால் முந்தைய ஆண்டுகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்குப் பிறகு இந்த வழித் தடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.