TNPSC Thervupettagam

பூஜ்ஜிய இருப்பு மகளிர் சுய உதவிக் குழு சேமிப்புக் கணக்கு – IPPB

May 6 , 2026 5 days 75 0
  • ஊரக இந்தியாவில் நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில், சுய உதவிக் குழுக்களுக்காக (SHGs) பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்கை இந்திய அஞ்சலகப் பண வழங்கீட்டு வங்கி (IPPB) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இத்திட்டம் பெண்கள் தலைமையிலான சுய உதவிக் குழுக்களை இலக்காகக் கொண்டது மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் ஆதரவைப் பெற்றுள்ளது.
  • இக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை, கணக்கு தொடங்கும் வைப்புத்தொகை கிடையாது, கணக்கினை மூடுவதற்கான கட்டணங்கள் இல்லை, மற்றும் அதிகபட்ச இருப்பு வரம்பு ₹2 லட்சம் ஆகும்.
  • இதன் மூலம் சுய உதவிக் குழுக்கள் நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT), டிஜிட்டல் வங்கிச் சேவைகள் மற்றும் முறையான கடன் வசதிகளை அணுக முடியும்.
  • இது முறைசாரா கடன் முறைகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், ஊரக குழுக்களிடையே முறையான சேமிப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்