TNPSC Thervupettagam

கேரள சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2026

May 6 , 2026 5 days 71 0
  • 2026 ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி அரசாங்கம் தோற்கடிக்கப் பட்டு, மாநிலத்தில் அதன் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
  • 140 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) சுமார் 97-98 இடங்களை வென்று, பெரும்பான்மைக்குத் தேவையான 71 என்ற எண்ணைக் கடந்துள்ளது.
  • இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) சுமார் 35 இடங்களைப் பிடித்து, 2016 ஆம் ஆண்டு முதல் இருந்த தனது ஆட்சியை இழந்துள்ளது.
  • 1957 ஆம் ஆண்டில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி - CPI) தலைமையில் உலகின் முதல் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்கத்தைக் கேரளா வழங்கியது.
  • இந்த முடிவின் மூலம், தற்போது எந்த இந்திய மாநிலமும் இடதுசாரி கட்சிகளால் ஆளப் பட வில்லை என்பதோடு இது 1977 ஆம் ஆண்டு முதல் சில மாநிலங்களில் தொடர்ந்து வந்த சுமார் 50 ஆண்டு கால இடதுசாரி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
  • வெளியேறும் LDF அரசாங்கத்திற்குப் பினராயி விஜயன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)) தலைமை தாங்கினார்.
  • மேற்கு வங்கம் (2011 ஆம் ஆண்டு வரை) மற்றும் திரிபுரா (2018 ஆம் ஆண்டு வரை) ஆகிய மாநிலங்களில் முன்னதாகக் காணப்பட்ட இடதுசாரிகளின் செல்வாக்கு சரிவை இத்தேர்தல்கள் காட்டுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்