தகவல் தொழில்நுட்ப (IT) சட்டம், 2000-இன் பிரிவு 69A இன் கீழான அதிகாரங்களைப் பயன்படுத்தி, புதிதாக உருவாக்கப்பட்ட 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின்' (CJP) இணைய தளம் மற்றும் சமூக வலைத்தளக் கணக்குகளை மத்திய அரசு முடக்கியது.
தகவல் தொழில்நுட்ப (IT) சட்டத்தின் பிரிவு 69A, தேசியப் பாதுகாப்பு, பொது அமைதி, இறையாண்மை அல்லது இந்தியாவின் பாதுகாப்பு கருதி இணைய உள்ளடக்கங்களை முடக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
இந்த நடவடிக்கையில், அக்கட்சியின் டிஜிட்டல் தளங்கள் மற்றும் இணையவழி தகவல் தொடர்பு வழிகளை முடக்குவதும் அடங்கும்.
பிரிவு 69A-இன் கீழான உத்தரவுகளானது, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) மூலம் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த முடக்கும் நடவடிக்கையானது, தகவல் தொழில்நுட்ப விதிகள், 2009-இன் கீழ் வழங்கப் பட்டுள்ள நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மேற் கொள்ளப்படுகிறது.