TNPSC Thervupettagam

BHAVYA திட்ட வழிகாட்டுதல்கள்

May 28 , 2026 2 days 66 0
  • தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT), பாரத் உத்யோகிக் விகாஸ் யோஜனா (BHAVYA) திட்டத்திற்கான செயல்பாட்டு வழி காட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • BHAVYA என்பது இந்தியா முழுவதும் முதலீட்டிற்குத் தயாரான மற்றும் உலகத்தரம் வாய்ந்த தொழிற்பேட்டைகளை உருவாக்குவதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு மத்திய துறைத் திட்டமாகும்.
  • இத்திட்டம் 2026-27 மற்றும் 2031-32 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சுமார் ₹33,660 கோடி மொத்த செலவில் 100 தொழிற்பேட்டைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டம் இந்தியாவில் தயாரிப்போம் முன்னெடுப்பு, பிரதான் மந்திரி கதி சக்தி திட்டம், உற்பத்தித் துறை வளர்ச்சி, தளவாட மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கிறது.
  • திட்ட நிறுவனங்கள் சட்டம், 2013-இன் கீழ் சிறப்பு நோக்க வாகனங்கள் (SPVs) மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும், மேலும் தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டுக் கழகம் (NICDC) திட்ட மேலாண்மை முகமையாகச் செயல்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்