TNPSC Thervupettagam

பக்கவாதம் - ஒரு பொது சுகாதார முன்னுரிமை

May 28 , 2026 2 days 47 0
  • 2026 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற 79-வது உலக சுகாதார சபையானது, பக்கவாதத்தை ஒரு முக்கிய பொது சுகாதார முன்னுரிமையாக அங்கீகரிக்கும் தனது முதல் தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • இத்தீர்மானம் பக்கவாதம் தடுப்பு, சரியான நேரத்திலான சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் நோயாளிகளுக்கான நீண்டகால ஆதரவு ஆகியவற்றில் வலுவான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறது.
  • பக்கவாதம் என்பது மூளைக்கான இரத்த ஓட்டத்தைத் தடைசெய்யும் அடைப்பு அல்லது இரத்தப்போக்கு ஆகியவற்றால் ஏற்படும் ஒரு மருத்துவ அவசரநிலையாகும், இது இறப்பு அல்லது ஊனத்திற்கு வழி வகுக்கும்.
  • உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 12 மில்லியன் (1.2 கோடி) மக்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர், மேலும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர்.
  • இந்தியாவில், பக்கவாத பாதிப்பு ஆண்டுதோறும் 1,00000 மக்களுக்கு 108 முதல் 172 பாதிப்புகள் வரை உள்ளது, மேலும் ஒரு மாதத்திற்குள்ளான இறப்பு விகிதம் 18% முதல் 42% வரை உள்ளது.
  • உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புகையிலை பயன்பாடு, உடல் பருமன், ஆரோக்கியமற்ற உணவு, மதுபான துஷ்பிரயோகம், உடற்பயிற்சியின்மை மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை பக்கவாதத்திற்கான முக்கிய ஆபத்துக் காரணிகளாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்