TNPSC Thervupettagam

கர்நாடகாவில் தோரியம் படிமங்கள் கண்டுபிடிப்பு

July 16 , 2026 12 days 89 0
  • கர்நாடகாவின் சாம்ராஜநகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் தோரியம் உள்ள கனிமப் படிமங்களை இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (GSI) அடையாளம் கண்டுள்ளது.
  • கூத்தனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் இந்தப் படிமங்கள் வரைபடமாக்கப்பட்டுள்ளன.
  • தோரியம் (Th) என்பது அணு எண் 90-ஐக் கொண்ட ஒரு கதிரியக்க உலோகமாகும். மேலும் இது அணு உலை எரிபொருள் பயன்பாட்டிற்காக யுரேனியம்-233 ஆக மாற்றப் படலாம்.
  • இந்தப் படிமங்கள் முக்கியமாக மோனசைட்டுடன் தொடர்புடையவை ஆகும். மோனசைட் என்பது தோரியம் மற்றும் அரிய வகை தனிமங்களைக் கொண்ட ஒரு பாஸ்பேட் கனிமமாகும்.
  • சுரங்கங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் GSI, இந்தியாவில் புவியியல் வரைபடமாக்கல் மற்றும் கனிம ஆய்வுகளை மேற்கொள்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்