மாநில அரசானது, கர்ப்பத்தினை சுயமாகப் பதிவு செய்யும் ஒரு விருப்பத் தேர்வினை அறிமுகப் படுத்தியுள்ளது.
திருமணமான பெண்கள் இனப்பெருக்க மற்றும் குழந்தை நலன் குறித்த அடையாள எண்ணைப் பெறுவதற்காக 12 இலக்க எண்ணைப் பயன்படுத்தி https://picme3.tn.gov.in என்ற PICME வலை தளத்தில் பதிவு செய்யலாம்.
பெண்கள் தேவையான விவரங்களை நிரப்பி, இணைய தளத்தில் குறிப்பிடப் பட்டுள்ள படி ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும்.
ஒரு பெண் தனது குழந்தையினுடைய தந்தையின் பெயரை வெளியிடாமல் இருக்கச் செய்வபதற்கான விருப்பத் தேர்வினையும் தேர்வுசெய்யலாம்.
ஒரு பெண்ணின் திருமண உறவில் ஏதும் மாற்றங்கள் ஏற்பட்டால், புதிதாகப் பிறந்த குழந்தையினுடைய தந்தையின் பெயரை மாற்றும் விருப்பத்தையும் இந்த வலை தளம் வழங்குகிறது.