வேளாண் ஆராய்ச்சி மையங்களின் உலகளாவிய வலையமைப்பான CGIAR (Consortium of International Agricultural Research Centers) ஆனது, தமிழ்நாட்டிற்கான புதிய பருவநிலை செயல் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது சமூகங்கள், குறிப்பாக அடிக்கடி வறட்சி அல்லது வெள்ளப் பாதிப்பினை எதிர் கொள்ளும் மாவட்டங்களில் பருவநிலை அபாயங்களை மிகச் சிறப்பாக நிர்வகிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பருவநிலைச் செயல் திட்டமானது இந்தச் சவால்களை நிவர்த்தி செய்வதற்காக என்று தற்போது நடப்பில் உள்ள தமிழ்நாடு வறட்சித் தணிப்புத் திட்டத்துடன் ஒன்றியவாறு மேற்கொள்ளப் படும்.