TNPSC Thervupettagam

வேளாண்மையில் எதிர்மறையான வளர்ச்சி விகிதம்

May 20 , 2025 16 hrs 0 min 33 0
  • எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக, 2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலமானது வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் எதிர்மறையான வளர்ச்சி விகிதத்தை எதிர் கொண்டுள்ளது.
  • கடந்த ஆண்டு, உண்மையான வளர்ச்சி விகிதமானது -0.09% ஆக இருந்தது.
  • அதே சமயத்தில், தமிழகமானது 9.69% என்ற உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைந்தது.
  • இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பதிவாகாத அளவிற்கு அதிகமாகும் என்பதோடு  கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பதிவான அதிகபட்ச வளர்ச்சி விகிதம் இதுவே ஆகும்.
  • வழக்கமாக, பயிர்களின் பங்கு சராசரியாக 40% ஆகவும், கால்நடைகளின் பங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாகவும் உள்ளது.
  • கடந்த ஆண்டு, பயிர்களின் பங்கு விகிதமானது சுமார் 39% ஆக இருந்தது என்பதோடு பயிர்களைப் பொறுத்தவரையில், வளர்ச்சி விகிதமானது 2021-22 ஆம் ஆண்டில் 9.5% ஆகவும், அடுத்த ஆண்டு 3.3% ஆகவும், 2023-24 ஆம் ஆண்டில் 4.2% ஆகவும் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்