'கலாம் & கவச் 3.0' மாநாடு புதுடெல்லியில் உள்ள மானேக்சா மையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் கருத்துரு “Taking JAI Forward With I²” என்பதாகும்.
இங்கு JAI என்பது கூட்டுத்தன்மை, ஆத்மநிர்பார்தா (தற்சார்பு) மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது.
I² என்பது பாதுகாப்புத் துறையில் உள்நாட்டுமயமாக்கல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை குறிக்கிறது.
இந்த மாநாடானது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் போர்க்கலை, மீயொலி வேக தொழில்நுட்பம், குவாண்டம் தொழில்நுட்பம் சார்ந்த C4ISR (கட்டளை, கட்டுப் பாடு, தகவல் தொடர்பு, கணினிகள், உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் ஆய்வு) மற்றும் ஒருங்கிணைந்த படைக்கட்டளைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.