சிறை பிடிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட கழுகுகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான இடங்களாக மகாராஷ்டிராவில் உள்ள மேல்காட் மற்றும் பெஞ்ச் புலிகள் காப்பகங்கள் உருவெடுத்துள்ளன.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களுக்கு இடையில் இரண்டு காப்பகங்களிலும் விடுவிக்கப்பட்ட 29 கழுகுகள் 78% வரையிலான உயிர் வாழும் விகிதங்களைப் பதிவு செய்துள்ளன.
இரை நிறைந்த மற்றும் இடையூறு இல்லாத புலிகளின் வாழ்விடங்கள் கழுகுகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு ஏற்றது என்பதை முடிவுகள் காட்டுவதாக பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் (BNHS) தெரிவித்துள்ளது.
இந்திய கழுகு (ஜிப்ஸ் இண்டிகஸ்) சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் மிக அருகி வரும் இனம் (Critically Endangered) என வகைப் படுத்தப் பட்டுள்ளது.
குறைந்து வரும் கழுகுகளின் எண்ணிக்கையைப் பாதுகாத்து மீட்டெடுப்பதையும், இந்தியாவில் அவற்றின் எதிர்காலத்தை வலுப்படுத்துவதையும் இந்த மறு அறிமுக முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.