TNPSC Thervupettagam

அதிக அபாயம் உள்ள பனிப்பாறை ஏரிகள் - சிக்கிம்

September 8 , 2026 5 days 61 0
  • சிக்கிம் மாநிலம், பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம் (GLOF) ஏற்படுவதற்கான அதிக அபாயம் உள்ள 'வகை A'-இல் உள்ள 16 ஏரிகள் உட்பட 40 அதிக ஆபத்துள்ள பனிப் பாறை ஏரிகளை அடையாளம் கண்டுள்ளது.
  • உருகும் பனிப்பாறைகள் மற்றும் குவிந்து உருகும் நீரிலிருந்து பனிப்பாறை ஏரிகள் உருவாகின்றன; அதிகப்படியான நீர் அல்லது பூகம்பங்கள் போன்ற தூண்டுதல்கள் காரணமாக இந்த ஏரிகள் திடீரென வெடிக்கும் போது GLOF-கள் நிகழ்கின்றன.
  • ஷாகோ சோ ஏரி GLOF-க்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக அடையாளம் காணப் பட்டுள்ளது; அதற்கான தணிப்பு நடவடிக்கைகளை சிக்கிம் தயாரித்து வருகிறது.
  • 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் சிக்கிமின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை GLOF அபாய மதிப்பீடு மற்றும் தணிப்புக்கான முகமைத் துறையாக உள்ளது.
  • இந்தியாவின் முதல் பிரத்யேக GLOF இடர் தணிப்பு நெறிமுறையை சிக்கிம் உருவாக்கி வருகிறது, அதே நேரத்தில் செயற்கைக்கோள் படங்கள், தொலை உணர்வு மற்றும் முன்-எச்சரிக்கை உணரிகள் கண்காணிப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்