TNPSC Thervupettagam

பள்ளிக்கரணை பறவைகள் எண்ணிக்கைப் பதிவு

September 8 , 2026 5 days 86 0
  • சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலம் 2026–27 வலசைபோகும் பறவைகள் பருவத்திற்கு முன்னதாக அதிக எண்ணிக்கையிலான பூர்வீக நீர் பறவைகளை பதிவு செய்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 3,091 கூட்ஸ்/நாமக்கோழிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2014-15 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
  • ஆகஸ்ட் மாதத்தில் 3,597 சாம்பல்நிறத் தலை கொண்ட நீர்க்கோழிகள் சாதனை அளவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலையில் உள்ள 252 ஓரியண்டல் டார்ட்டர்/பாம்புக் கழுத்து நீர் காகங்கள் காணப்பட்டன.
  • 2012 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து நேச்சர் டிரஸ்ட் (Nature Trust) சதுப்புநிலத்தில் உள்ள பறவைகளை கண்காணித்து ஆவணப்படுத்தி வருகிறது.
  • வலசைபோகும் பறவைகள் பருவம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட்/செப்டம்பர் முதல் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல்/மே வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்