TNPSC Thervupettagam

கழுகுகள் மறு அறிமுகம் – மகாராஷ்டிரா

September 8 , 2026 5 days 70 0
  • சிறை பிடிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட கழுகுகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான இடங்களாக மகாராஷ்டிராவில் உள்ள மேல்காட் மற்றும் பெஞ்ச் புலிகள் காப்பகங்கள் உருவெடுத்துள்ளன.
  • 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களுக்கு இடையில் இரண்டு காப்பகங்களிலும் விடுவிக்கப்பட்ட 29 கழுகுகள் 78% வரையிலான உயிர் வாழும் விகிதங்களைப் பதிவு செய்துள்ளன.
  • இரை நிறைந்த மற்றும் இடையூறு இல்லாத புலிகளின் வாழ்விடங்கள் கழுகுகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு ஏற்றது என்பதை முடிவுகள் காட்டுவதாக பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் (BNHS) தெரிவித்துள்ளது.
  • இந்திய கழுகு (ஜிப்ஸ் இண்டிகஸ்) சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் மிக அருகி வரும் இனம் (Critically Endangered) என வகைப் படுத்தப் பட்டுள்ளது.
  • குறைந்து வரும் கழுகுகளின் எண்ணிக்கையைப் பாதுகாத்து மீட்டெடுப்பதையும், இந்தியாவில் அவற்றின் எதிர்காலத்தை வலுப்படுத்துவதையும் இந்த மறு அறிமுக முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்