TNPSC Thervupettagam

காகபோ பாதுகாப்பு மீட்பு

September 8 , 2026 5 days 82 0
  • உலகின் மிக அதிக எடையுள்ள கிளி இனமான, நியூசிலாந்தின் மிகக் கடுமையான அழிவின் விளிம்பில் உள்ள 'காகாபோ' (kākāpō) பறவைகளின் எண்ணிக்கை, 1995-ஆம் ஆண்டில் 51-ஆக இருந்த நிலையில் தற்போது 325-ஆக உயர்ந்துள்ளது.
  • காகபோ, அறிவியல் ரீதியாக ஸ்ட்ரிகோப்ஸ் ஹாப்ரோப்டிலா (Strigops habroptila) என அழைக்கப் படுகிறது, இது IUCN செந்நிறப் பட்டியலில் மிகவும் அருகி வரும் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு இனப்பெருக்கப் பருவம் 90 குஞ்சுகளை உருவாக்கியது, இது நவீன மீட்புத் திட்டத்தின் கீழ் பதிவான அதிகபட்ச அளவாகும்.
  • காகபோ என்பது நியூசிலாந்தை பூர்வீகமாகக் கொண்ட பறக்க முடியாத கிளி இனம் ஆகும்.
  • பாதுகாப்பு ஆர்வலர்கள் எஞ்சியிருக்கும் பறவைகளை வேட்டையாடுபவர்கள் இல்லாத கடல் தீவுகளுக்கு மாற்றினர் மற்றும் தீவிர கண்காணிப்பு மற்றும் இனப்பெருக்கத் திட்டங்களைத் தொடங்கினர்.
  • ரிமு மரங்கள் அதிக பழங்களை உருவாக்கும் போது, அவை வழக்கமாக 2-4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இனப்பெருக்கம் செய்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்