காசா அமைதி உச்சி மாநாடு எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நடைபெற்றது.
இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரால் இணைந்து நடத்தப்பட்டது.
எஞ்சியுள்ள அனைத்து பணயக்கைதிகளை விடுவித்ததையும் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் தொடர்ந்து உச்சி மாநாடு நடைபெற்றது.
மத்தியக் கிழக்கில் பிராந்திய அமைதி மற்றும் நிலைத் தன்மைக்கான முயற்சிகளை வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.