குறைந்தபட்ச ஆதார விலையில் கூடுதலாக காடுகளின் 23 சிறு உற்பத்திப் பொருட்கள் (MFP - Minor Forest Produce) சேர்க்கப் பட்டுள்ளதாக மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்திய வனச் சட்டம், 1927 என்ற சட்டம் வன உற்பத்திப் பொருளை வரையறுக்கின்றது.
எனினும், MFP ஆனது 2007 ஆம் ஆண்டில் தான் வரையறுக்கப்பட்டது.
இது வன உரிமைகள் சட்டம் அல்லது பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் இதரப் பாரம்பரிய வனப் பொருட்கள் சேகரிப்பாளர்கள் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம், 2006 என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தியதின் மூலம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
MFP என்பது மரம் அல்லாத தாவரம் சார்ந்த அனைத்து வன உற்பத்திப் பொருள் என வரையறுக்கப் படுகின்றது.
மூங்கில், சிறு கிளைகள், அடிக்கட்டை, பிரம்புகள், துசர், பட்டுக்கூடு, தேன், மெழுகுகள், அரக்கு, டென்டு/கெண்டு இலைகள், மருத்துவக் குணம் பொருந்திய தாவரங்கள், மூலிகைகள், வேர்கள், கிழங்குகள் ஆகியவை MFPயில் உள்ளடங்கி உள்ளன.
ஆகவே காடுகளின் சிறு உற்பத்திப் பொருளின் வரையறையில் மூங்கில் மற்றும் பிரம்புகளும் உள்ளடங்கியுள்ளன.