தமிழ்நாடு மாநிலத்தில் 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில், 3,170 காட்டு யானைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2024 ஆம் ஆண்டில் இருந்த 3,063 என்ற எண்ணிக்கையை விட 107 அதிகமாகும்.
இந்த ஒத்திசைவுக் கணக்கெடுப்பு ஆனது நேரடி மற்றும் மறைமுக முறைகளைப் பயன்படுத்தி 26 வனப் பிரிவுகளில் சுமார் 8,989.63 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மேற் கொள்ளப் பட்டது.
நீலகிரி யானைகள் வளங்காப்பகத்தில் 2,419 யானைகள் (தொகுதி எண்ணிக்கை) மற்றும் 3,163 யானைகள் (சாண எண்ணிக்கை) என்ற அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
மொத்த எண்ணிக்கையில் 44% யானைகள் நன்கு வளர்ந்த இளம் பருவ யானைகள் ஆகும் என்ற நிலையில் அவற்றுள் 1.77 பெண் யானைகளுக்கு 1 ஆண் யானை என்ற பாலின விகிதம் பதிவு செய்யப் பட்டுள்ளது.