சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகின்ற ஏரோடெஃப்கான் 2025 நிகழ்வினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
இந்த மூன்று நாட்கள் அளவிலான உலகளாவிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிகழ்வினை TIDCO (தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம்), AIDAT (தமிழ்நாடு விண்வெளி தொழில்துறை மேம்பாட்டுச் சங்கம்) மற்றும் பிரான்சு நாட்டின் BCI ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஆகியவை ஏற்பாடு செய்கின்றன.
பாதுகாப்பு அமைச்சகத்தினால் ஆதரிக்கப்படுகின்ற இந்த நிகழ்வானது உள்நாட்டு மயமாக்கல், தன்னிறைவு மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்துகிறது.