மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தேரழந்தூரில் உள்ள வேதபுரீஸ்வரர் சிவன் கோவிலில் 10 சோழர் காலக் கல்வெட்டுகளை இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) கண்டெடுத்து ஆவணப்படுத்தியுள்ளது.
இரண்டு கல்வெட்டுகள் ஆனது முதலாம் குலோத்துங்க சோழனின் 34 மற்றும் 44 ஆம் ஆட்சியாண்டுகளைச் சேர்ந்தவையாகும்.
இந்தக் கோயிலில் விளக்கு ஏற்றுவதற்காக பிராமணர்களுக்கு ஐந்து தங்க நாணயங்கள் வழங்கப்பட்டதாக இதில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் திருமஞ்சனத்திற்கான நன்கொடைகள், கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கான அபராதங்கள் குறித்தும் பதிவு செய்யப்பட்டிருந்தன அதே நேரத்தில் இதில் இரண்டாம் இராஜராஜன் சோழன் காலத்தைச் சேர்ந்த ஒரு கல்வெட்டானது நுண்டாவிளக்கு ஏற்றுவதற்கான நன்கொடைகளைக் குறிப்பிடுகிறது.