TNPSC Thervupettagam

காட்ரா – தில்லி விரைவுச் சாலை பெருவழிப் பாதை

August 16 , 2020 1836 days 679 0
  • தன்னளவில் இதே வகையைச் சேர்ந்த முதலாவதான காட்ரா (ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசம்) – தில்லி விரைவுச் சாலை பெருவழிப்பாதை பணியானது 2023 ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • இந்த விரைவுப் பெருவழிப் பாதையானது காட்ரா மற்றும் தில்லி ஆகியவற்றிற்கிடையேயான பயண நேரத்தை ஆறரை மணி நேரமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • இந்த விரைவுப் பெருவழிப் பாதையானது இந்திய அரசினால் நிதியளிக்கப்படும் மற்றும் ஆதரவளிக்கப்படும் சாலை மற்றும் நெடுஞ்சாலைகள் திட்டமானபாரத்மாலா பரியோஜனாஎன்பதின் கீழ் கட்டப்பட்டு வருகின்றது.
  • காட்ரா என்பது ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி என்ற ஒரு புனிதத் தளம் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீரில் இருக்கும் ஒரு நகரமாகும்.
  • இந்தச் சாலைப் பெருவழிப் பாதையானது பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள காட்ரா வைஷ்ணவி தேவி ஆகிய புனிதத் தளங்களை இணைக்கவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்