TNPSC Thervupettagam

காண்டாமிருகங்கள் கணக்கெடுப்பு 2026

July 16 , 2026 12 days 85 0
  • 2026 ஆம் ஆண்டு ஜூன் 25 முதல் 27 வரை நடத்தப்பட்ட நான்காவது காண்டாமிருகங்கள் கணக்கெடுப்பின்படி, உத்தரப் பிரதேசத்தின் துத்வா புலிகள் காப்பகத்தில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்திய காண்டாமிருகம் (ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம்) IUCN (சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம்) செந்நிறப் பட்டியலில் 'எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்' (Vulnerable) எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • துத்வாவில் காண்டாமிருகங்கள் மறுஅறிமுகத் திட்டம் 1984-85 ஆம் ஆண்டில் அசாம் மற்றும் நேபாளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஏழு காண்டாமிருகங்களுடன் தொடங்கப் பட்டது.
  • 2026 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பு வனத்துறை அதிகாரிகள் மற்றும் உலக வனவிலங்கு நிதியம்-இந்தியா (WWF-India) ஊழியர்களைக் கொண்ட 20 குழுக்களால் நடத்தப் பட்டது.
  • துத்வா புலிகள் காப்பகம் காண்டாமிருகங்களை இனப்பெருக்கம், பாதுகாப்பு மற்றும் காடுகளில் விடுவிப்பதற்காக காண்டாமிருக மறுவாழ்வு மண்டலங்கள் (RR1 மற்றும் RR2) மூலம் நிர்வகிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்