TNPSC Thervupettagam

உலகளாவிய உயிரித்திரள் உமிழ்வு 2026

July 15 , 2026 13 days 108 0
  • கோபர்நிகஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவையின் (CAMS) தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் உலகளாவிய உயிரித்திரள் எரிப்பு உமிழ்வுகள் அதன் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை உயிரித்திரள் எரிப்பதால் ஏற்படும் மொத்த கார்பன் உமிழ்வு 400 மெகாடன்களுக்குக் குறைவாகவே இருந்துள்ளது.
  • சுமார் 154 மெகா டன் கார்பன் உமிழ்வுடன் ஆப்பிரிக்கா மிகப்பெரிய உமிழ்வுப் பகுதியாக உள்ளது, அதைத் தொடர்ந்து ஆசியா சுமார் 113 மெகா டன்களுடன் உள்ளது.
  • CAMS அமைப்பானது 2003 ஆம் ஆண்டு முதல் செயற்கைக்கோள் கண்காணிப்புகள் மூலம் செயலில் உள்ள தீ விபத்துகளைக் கண்காணிக்க உலகளாவிய தீ ஒருங்கிணைப்பு அமைப்பு (GFAS) தரவுத் தொகுப்பைப் பயன்படுத்துகிறது.
  • யூரேசியா மற்றும் வட அமெரிக்காவில் ஜூன் மாத இறுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ மற்றும் எல் நினோ நிலைகள் 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உமிழ்வை மிகவும் அதிகரிக்கக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்