2026 ஆம் ஆண்டு ஜூன் 25 முதல் 27 வரை நடத்தப்பட்ட நான்காவது காண்டாமிருகங்கள் கணக்கெடுப்பின்படி, உத்தரப் பிரதேசத்தின் துத்வா புலிகள் காப்பகத்தில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
இந்திய காண்டாமிருகம் (ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம்) IUCN (சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம்) செந்நிறப் பட்டியலில் 'எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்' (Vulnerable) எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.
துத்வாவில் காண்டாமிருகங்கள் மறுஅறிமுகத் திட்டம் 1984-85 ஆம் ஆண்டில் அசாம் மற்றும் நேபாளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஏழு காண்டாமிருகங்களுடன் தொடங்கப் பட்டது.
2026 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பு வனத்துறை அதிகாரிகள் மற்றும் உலக வனவிலங்கு நிதியம்-இந்தியா (WWF-India) ஊழியர்களைக் கொண்ட 20 குழுக்களால் நடத்தப் பட்டது.
துத்வா புலிகள் காப்பகம் காண்டாமிருகங்களை இனப்பெருக்கம், பாதுகாப்பு மற்றும் காடுகளில் விடுவிப்பதற்காக காண்டாமிருக மறுவாழ்வு மண்டலங்கள் (RR1 மற்றும் RR2) மூலம் நிர்வகிக்கிறது.