மங்கோலிய நாட்டின் ஒரு அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் இருந்து ஒரு புதிய வகை டைனோசரை அறிவியலாளர்கள் கண்டறிந்துளனர்.
அவர்கள் ஆய்வு செய்த சுமார் 86 மில்லியன் ஆண்டுகள் மிகப் பழமையான இரண்டு எலும்புக் கூடுகள், தற்போது அனைத்து வகையான டைரனோசர்களின் நெருங்கிய மூதாதையரான ஓர் இனத்தைச் சேர்ந்தவை எனக் கண்டறியப் பட்டுள்ளன.
அவை டி.ரெக்ஸ் எனும் முதன்மையானதொரு டைரனோசர் இனத்தினை உள்ளடக்கிய வேட்டையாடும் குழுவினைச் சார்ந்தது.
அவர்கள் அந்த ஒரு இனத்திற்கு மங்கோலியாவின் டிராகன் இளவரசன் என்று பொருள் படும் கான்குலுலு (கான் கூ லூ - khan-KOO-loo என்றும் இது உச்சரிக்கப் படுகிறது) மங்கோலியென்சிஸ் என்று பெயரிட்டனர்.
'பிரின்ஸ்' என்பது ஓர் ஆரம்பகால, மிகச் சிறிய வகை டைரனோசொராய்டு என்பதைக் குறிக்கிறது.