காப்பீட்டு கோரிக்கைகளை தவணை முறையில் செலுத்துவதை ஆய்வு செய்ய குழு
October 24 , 2018 2484 days 748 0
காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது (IRDAI - Insurance Regulatory and Development Authority of India) பொது மற்றும் சுகாதார காப்பீட்டு கோரிக்கைகளை தவணைகளாக செலுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய ஒரு குழுவை அமைத்துள்ளது.
இது IRDAI-ன் நிர்வாக இயக்குனர் (சுகாதாரம்) சுரேஷ் மாத்தூரால் தலைமை வகிக்கப்படுகிறது.
இந்தக் குழுவானது பொது மற்றும் சுகாதாரக் காப்பீட்டு நிறுவனங்களால் தனி நபர் விபத்து மற்றும் சலுகை அடிப்படையிலான சுகாதாரக் காப்பீட்டு கோரிக்கைகளை தவணை முறையில் வழங்க அனுமதிப்பது குறித்த தேவைகளை ஆய்வு செய்யும்.