TNPSC Thervupettagam

கார்பன் விலை நிர்ணயத்தின் நிலை மற்றும் போக்குகள் 2026

May 27 , 2026 3 days 58 0
  • உலக வங்கி குழுமமானது "கார்பன் விலை நிர்ணயத்தின் நிலை மற்றும் போக்குகள் 2026" என்ற அறிக்கையின் 13-வது பதிப்பை வெளியிட்டது.
  • 2026-ஆம் ஆண்டில் கார்பன் கிரெடிட் வர்த்தகத் திட்டம் (CCTS) தொடங்கப்பட்ட பிறகு, உலகின் மிகப்பெரிய புதிய கார்பன் சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
  • உலகளாவிய பசுமைக்குடில் வாயு (GHG) உமிழ்வுகளில் 29 சதவீதத்தை கார்பன் விலை நிர்ணய அமைப்புகள் தற்போது உள்ளடக்கியுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
  • உமிழ்வு வர்த்தக அமைப்புகள் (ETS) மற்றும் கார்பன் வரிகள் மூலம் கிடைக்கும் உலகளாவிய வருவாய் 2016-ஆம் ஆண்டில் 30 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறைவாக இருந்த நிலையில், 2025-ஆம் ஆண்டில் 107 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
  • இந்தியாவின் கார்பன் கடன் வர்த்தகத் திட்டமானது (CCTS) மின் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எரிசக்தி திறன் பணியகத்தால் (BEE) நிர்வகிக்கப்படுகிறது.
  • இந்தியாவின் கார்பன் கடன் வர்த்தகத் திட்டம், 'செயல்படுத்து, சாதித்திடு மற்றும் வர்த்தகம் செய்' (PAT) திட்டத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதோடு மேலும் இது 2070-ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை எட்டும் இந்தியாவின் இலக்கை ஆதரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்