TNPSC Thervupettagam

சீனாவின் WTO கோரிக்கை மீது இந்தியா

May 27 , 2026 3 days 54 0
  • இந்தியாவின் சூரிய சக்தி மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) நடவடிக்கைகளுக்கு எதிராக தகராறு தீர்வு குழுவை அமைக்கக் கோரி உலக வர்த்தக அமைப்பில் (WTO) சீனா விடுத்த கோரிக்கையை இந்தியா தடுத்து நிறுத்தியது.
  • உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட சுங்கவரி வரம்புகளுக்கு மேலாக, இறக்குமதி செய்யப்படும் தகவல் தொழில்நுட்ப (IT) பொருட்களுக்கு இந்தியா சுங்க வரியை விதிப்பதாக சீனா குற்றம் சாட்டியது.
  • சூரிய ஆற்றல் தொகுதி உற்பத்தியில் உள்ளூர் மதிப்பு கூட்டுதலுடன் இணைக்கப்பட்ட இந்தியாவின் சூரிய சக்தி துறைக்கான ஊக்கத்தொகைகளுக்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்தது.
  • உலக வர்த்தக அமைப்பின் (WTO) தகராறு தீர்வு அமைப்பானது உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக தகராறுகளை ஆலோசனைகள் மற்றும் குழுக்கள் மூலம் கையாள்கிறது.
  • உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளின்படி, தகராறு தீர்வு குழுவை அமைப்பதற்கான முதல் கோரிக்கையை சம்பந்தப்பட்ட எதிர் நாடு தடுத்து நிறுத்த முடியும்.
  • தனது சுங்கவரி நடவடிக்கைகள் மற்றும் சூரிய சக்தி ஊக்கத்தொகைகள் உலக வர்த்தக அமைப்பின் (WTO) வர்த்தக விதிகளுக்கு உட்பட்டே இருப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்