TNPSC Thervupettagam

காணாமல் போன குழந்தைகள் வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு

May 27 , 2026 3 days 69 0
  • காணாமல் போன குழந்தைகள் மற்றும் காணாமல் போன நபர்கள் குறித்த ஒவ்வொரு புகாருக்கும் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யுமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • காணாமல் போன குழந்தைகள் வழக்குகளை, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023-இன் கீழ், ஆள்கடத்தல் வழக்குகளாக உடனடியாக கருதி செயல்படுமாறு காவல் துறையினருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
  • இந்தத் தீர்ப்பை நீதிபதி அஹ்சனுதீன் அமனுல்லா மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியது.
  • இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவுகளும் (AHTUs) நான்கு வாரங்களுக்குள் முழுமையாகச் செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • காணாமல் போன குழந்தைகள், காணாமல் போன பெண்கள் மற்றும் ஆள்கடத்தல் வழக்குகள் தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களையும் இணைக்கும் தேசிய தரவு கட்டமைப்பு ஒன்றை உருவாக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  • காணாமல் போன குழந்தைகள் வழக்குகளுக்காக இந்தியா முழுமைக்குமான ஒரு நிலையான வழிகாட்டு நெறிமுறையை (SOP) தயாரிக்க, நீதிபதி முக்தா குப்தா தலைமையிலான குழு ஒன்றையும் நீதிமன்றம் அமைத்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்