சமீபத்திய மாதிரிப் பதிவு கணக்கெடுப்பு (SRS) 2024 அறிக்கையானது, இந்தியாவின் பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் மற்றும் சிசு மரண விகிதம் (IMR) ஆகியவற்றில் சரிவைக் காட்டியுள்ளது.
இந்தியாவின் பிறப்பு விகிதம் 2014-ஆம் ஆண்டில் 1,000 மக்கள் தொகைக்கு 21 ஆக இருந்த நிலையில், 2024-ஆம் ஆண்டில் 18.3 ஆகக் குறைந்துள்ளது என்பதோடு, இறப்பு விகிதமும் 6.7-லிருந்து 6.4 ஆகக் குறைந்துள்ளது.
1,000 உயிருள்ள பிறப்புகளுக்கு ஏற்படும் சிசு மரணங்களை அளவிடும் சிசு மரண விகிதம் (IMR), 2014-ஆம் ஆண்டில் 39 ஆக இருந்த நிலையில் 2024-ஆம் ஆண்டில் 24 ஆகக் குறைந்துள்ளது.
பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் மற்றும் சிசு மரண விகிதக் குறியீடுகளில் கிராமப் புறங்களை விட நகர்ப்புறங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன.
இயற்கை வளர்ச்சி விகிதம் (NGR) என்பது இடப்பெயர்வை தவிர்த்து, பிறப்பு மற்றும் இறப்பு மூலம் ஏற்படும் மக்கள் தொகை பெருக்கத்தை அளவிடுகிறது.
நாட்டிலேயே மிகக் குறைந்த இயற்கை வளர்ச்சி விகிதமான 3.9 மற்றும் மிகக் குறைந்த சிசு மரண விகிதமான 8-ஐ கேரளா பதிவு செய்துள்ளது.
பெரிய மாநிலங்களுக்கிடையே, 4.8 இயற்கை வளர்ச்சி விகிதம் மற்றும் 11 சிசு மரண விகிதத்துடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
சிறிய மாநிலங்களில், 4.2 இயற்கை வளர்ச்சி விகிதம் மற்றும் 11 சிசு மரண விகிதத்துடன் கோவா சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.