2025 ஆம் ஆண்டில் உலகின் மோசமான காற்றுத் தரங்கள் கொண்ட நகரங்கள் தரவரிசையில் இந்திய நகரங்கள் முதல் 40 இடங்களைப் பிடித்துள்ளன.
இராஜஸ்தானில் உள்ள ஸ்ரீகங்காநகரில் 840 என்ற காற்றுத் தரக் குறியீட்டுடன் (AQI) மோசமான காற்றுத் தரம் பதிவாகியுள்ளது.
ஹரியானாவில் உள்ள சிவானியில் 644 என்ற இரண்டாவது மிக உயர்ந்த AQI குறியீடு பதிவானது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து பஞ்சாபில் உள்ள அபோஹர் 634 குறியீட்டினைக் கொண்டுள்ளது.
டெல்லி 433 என்ற AQI உடன் உலகளவில் 13வது இடத்தைப் பிடித்ததுடன், 'கடுமையான காற்று மாசுபாடு' என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் உள்ள பிற முக்கிய நகரங்களில் வட இந்தியாவில் உள்ள ஹிசார், சுரு, சர்கி தாத்ரி மற்றும் ரோஹ்தக் ஆகியவை அடங்கும்.
AQI பிரிவுகள் ஆனது, நல்ல நிலை (0–50), திருப்திகரமான நிலை (51–100), மிதமான மாசுபாடு (101–200), மோசமான நிலை (201–300), மிகவும் மோசமான நிலை (301–400), மற்றும் கடுமையான நிலை (401–500) என வரையறுக்கப்படுகின்றன.