'காலர்வாலி' என்று பிரபலமாக அறியப் படும் இந்தியாவின் "சூப்பர்மாம்" புலி (Supermom Tiger), மத்தியப் பிரதேசத்தில் உள்ள பென்ச் புலிகள் காப்பகத்தில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது.
இதற்கு வயது பதினாறுக்கும் மேல் ஆகும்.
‘காலர்வாலி’ புலி தனது வாழ்நாளில் 29 குட்டிகளை ஈன்றதிற்காக அறியப் படுகின்றது.
இது ஒரு உலக சாதனை என்று நம்பப்படுகிறது.
இந்தப் புலிக்கு வனத்துறையினர் வழங்கிய அதிகாரப்பூர்வ பெயர் T-15 என்பதாகும்.
ஆனால் உள்ளூர் மக்களால் இது 'காலர்வாலி' என்று அழைக்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டில் இப்பூங்காவில் ரேடியோ காலர் பொருத்தப்பட்ட முதல் புலி என்ற ஒரு பெருமையைப் பெற்றதால், அதற்கு இவ்வாறு பெயர் வைக்கப்பட்டது.
இதன் குறிப்பிடத்தக்க பங்களிப்பால் மத்தியப் பிரதேசம் ‘புலி மாநிலம்’ (Tiger State) என்ற ஒரு அடையாளத்தையும் பெற்றது.