சாரதா எழுத்து வடிவிற்கென பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்ட முதல் கண்காட்சி ஸ்ரீநகரில் உள்ள சினார் புத்தக விழாவில் நடைபெற்றது.
கி.பி 8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் உருவாக்கப்பட்ட சாரதா எழுத்து வடிவமானது பிரதானமாக காஷ்மீரி பண்டிதர்களால் பயன்படுத்தப்பட்டது.
1875 மற்றும் 1925 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் காகிதம் மற்றும் பிர்ச் மரப் பட்டைகளில் எழுதப்பட்ட பல நூல்கள் கொண்ட சில கையெழுத்துப் பிரதிகள் எஞ்சி உள்ளன.
தொல்பொருள் கண்டுபிடிப்புகளில் குப்வாராவின் லோலாப் பள்ளத்தாக்கில் உள்ள வீரக்கற்களில் சாரதா கல்வெட்டுகளின் 21 வரிகளும், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கண்டுபிடிப்புகளும் அடங்கும்.