கிக் தொழிலாளர்களுக்கான டிஜிட்டல் வழி குறைதீர்க்கும் அமைப்பு
May 6 , 2026 5 days 67 0
இந்தியாவில் முதல் முறையாக, கிக் தொழிலாளர்களுக்கென பிரத்யேக டிஜிட்டல் வழி குறைதீர்க்கும் அமைப்பைக் கர்நாடகா தொடங்கியுள்ளதுடன் இது நாட்டில் ஒரு பெரிய தொழிலாளர் நலச் சீர்திருத்த முன்னெடுப்பாகும்.
கிக் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்த பொது குறைதீர்க்கும் அமைப்பு (IPGRS) வலைத் தளம் மூலம் ஊதியம், வேலை நிலைமைகள் மற்றும் டிஜிட்டல் தளங்களுடனான மோதல்கள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்யலாம்.
இந்த வழிமுறையானது விரிவடைந்து வரும் கிக் பொருளாதாரத் துறையில் வெளிப்படைத் தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் குறைகளை விரைவாகத் தீர்ப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கர்நாடகா, ராஜஸ்தான், பீகார் மற்றும் ஜார்க்கண்டிற்குப் பிறகு, கிக் தொழிலாளர் சட்டத்தை இயற்றிய ஐந்தாவது மாநிலமாகத் தெலுங்கானா உருவெடுத்துள்ளதுடன் இது இனைய தள அடிப்படையிலான தொழிலாளர்களுக்கான சட்டப் பாதுகாப்பை வலுப் படுத்துகிறது.