TNPSC Thervupettagam

கிம்பர்லி செயல்முறை மாநாடு 2026

May 21 , 2026 12 days 109 0
  • 2026 ஆம் ஆண்டிற்கான கிம்பர்லி செயல்முறை (KP) அமைப்பின் தலைவராக, இந்தியா 2026-ஆம் ஆண்டின் கிம்பர்லி செயல்முறை இடைக்காலக் கூட்டத்தை மும்பையில் நடத்தியது.
  • உலகளாவிய சந்தையில் மோதல்மிக்க பகுதிகளின் வைரங்கள் நுழைவதைத் தடுப்பதற்கான கிம்பர்லி செயல்முறை சான்றிதழ் திட்டத்தை (KPCS) வலுப்படுத்துவதில் இக்கூட்டம் கவனம் செலுத்தியது.
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைத் தீர்மானத்தின் கீழ் நிறுவப்பட்ட KPCS அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்றாகும்.
  • இந்தியாவின் 2026 ஆம் ஆண்டுத் தலைமையின் கருத்துருவானது நம்பகத்தன்மை, இணக்கம் மற்றும் நுகர்வோர் நம்பிக்கை ஆகிய 3C-க்களை அடிப்படையாகக் கொண்டது.
  • பட்டை தீட்டப்படாத வைரங்களின் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக 2000-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க நாடுகளால் கிம்பர்லி செயல்முறை தொடங்கப்பட்டது.
  • உலகில் 90% வைரங்களை இந்தியா பட்டை தீட்டுவதுடன் உலகளாவிய வைர வர்த்தக மதிப்பில் சுமார் 75% பங்கை இந்தியா கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்