TNPSC Thervupettagam

கியோட்டோ நெறிமுறையின் செல்லுபடி காலம்

August 6 , 2025 15 days 79 0
  • சர்வதேச நீதிமன்றம் (ICJ) ஆனது 2015 ஆம் ஆண்டு பாரிசு உடன்படிக்கை இருந்த போதிலும் 1997 ஆம் ஆண்டு கியோட்டோ நெறிமுறை சட்டப்பூர்வமாகச் செல்லுபடி கும் என்று தீர்ப்பளித்தது.
  • சர்வதேச சட்டத்தின் கீழ் உலக நாடுகள் கியோட்டோ நெறிமுறையின் விதிகள் மற்றும் உமிழ்வு இலக்குகளுக்கு இணங்க வேண்டும்.
  • இந்த நெறிமுறையின் முதல் உறுதிப்பாட்டுக் காலம் 2008 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலும், இரண்டாவது உறுதிப்பாட்டுக் காலம் 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் இருந்தது.
  • இங்கு பாரிசு உடன்படிக்கையானது கியோட்டோ நெறிமுறையை நிறுத்தவில்லை என்றாலும் 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு புதிய உறுதிப்பாட்டுக் காலம் எதுவும் நிர்ணயிக்கப் படவில்லை.
  • கியோட்டோ நெறிமுறையுடன் இணங்காதது சர்வதேச அளவில் தவறான செயலாகக் கருதப்படலாம்.
  • ICJ தீர்ப்பு ஆனது ஆலோசனை சார்ந்தது மற்றும் உலகளவில் பருவநிலைப் பொறுப்பு உணர்வை அதிகரிப்பதற்கும் வழக்குத் தொடரவும் வழி வகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்