TNPSC Thervupettagam

கிராமப்புற கழிவு மேலாண்மை

September 10 , 2026 3 days 51 0
  • அசாமின் மஜுலி மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் ஆகிய மாவட்டங்கள் கிராமப்புறக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கான சமூகம் சார்ந்த மாதிரிகளை உருவாக்கியுள்ளன.
  • மஜுலியில், 20 ஊராட்சிகளில் 19 ஊராட்சிகளில் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மத்தியப் பொருள் சேகரிப்பு மையங்களில் (CMCFs) தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்பவர்களுக்கு அனுப்பப்படுகின்றன.
  • 2024 ஆம் ஆண்டு முதல், மஜுலி 82.4 டன் கழிவுகளை சேகரித்து, அவை பிரம்மபுத்திரா நதியிலும் கடலிலும் கலப்பதைத் தடுத்துள்ளது.
  • தவாங்கில், கிராம மக்கள் மாதந்தோறும் 'ஸ்வச்சதா திவாஸ்' (தூய்மை தினம்) நடத்தி, கழிவுகளை 22 பிரிவுகளாகப் பிரித்து பொருள் மீட்பு மையங்களுக்கு (MRFs) அனுப்புகின்றனர்.
  • 26 கிராமங்கள் 30 டன் கழிவுகளைச் சேகரித்துள்ளன, அதில் 20 டன்னுக்கும் அதிகமான கழிவுகள் மறுசுழற்சியாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு ₹3.53 லட்சம் வருவாய் ஈட்டப் பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்