கிராமப்புற பாரம்பரிய மற்றும் மேம்பாட்டிற்கான இந்திய அறக்கட்டளை (ITRHD)
July 24 , 2018 2473 days 875 0
கிராமப்புற பாரம்பரிய மற்றும் மேம்பாட்டிற்கான இந்திய அறக்கட்டளையின் (ITRHD - Indian Trust for Rural Heritage and Development) 7வது வருட பொதுக் குழு சந்திப்பு புதுதில்லியில் நடைபெற்றது.
இது கிராமப்புற இந்தியாவில் உள்ள இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். இந்தியாவில் 7 மாநிலங்களில் இந்த அமைப்பு தனது பணியினை மேற்கொண்டு வருகிறது.
ஜார்க்கண்டில் உள்ள மலுட்டி, தும்கா ஆகிய கிராமங்களில் உள்ள 17 முதல் 19 நூற்றாண்டுகள் காலத்திற்குட்பட்ட டெரகோட்டா ஆலயங்களைப் பாதுகாப்பது ஆகிய பணிகளை இந்த அமைப்பு மேற்கொள்கிறது.
’மலுட்டி திட்டம்’ பிரதம அமைச்சர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. அங்கு உள்ள 108 ஆலயங்களில் பாழடைந்த நிலையிலுள்ள 62 ஆலயங்களைப் பாதுகாப்பது இத்திட்டத்தின் குறிக்கோளாகும்.