TNPSC Thervupettagam

கிலாண்டர்ஸ் நோய்ப் பாதிப்பு ஒழிப்புத் திட்டம்

September 1 , 2025 21 days 85 0
  • கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையானது, கிலாண்டர்ஸ் நோய் குறித்த திருத்தப்பட்ட தேசிய செயல் திட்டத்தை வெளியிட்டது.
  • இந்தத் திருத்தப்பட்ட திட்டம் ஆனது விலங்கு சுகாதாரப் பாதுகாப்பு, ஒற்றை நிலை சுகாதாரத் தயார்நிலை மற்றும் கால்நடைகள்/குதிரையினங்கள் சார்ந்த வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதை வலியுறுத்துகிறது.
  • இந்தத் திட்டமானது மாநில அரசுகள், கால்நடை பல்கலைக்கழகங்கள் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும்.
  • கிலாண்டர்ஸ் என்பது குதிரைகள், கோவேறிக் கழுதைகள் மற்றும் கழுதைகளைப் பாதிக்கின்ற, பெரும்பாலும் அவற்றின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கின்ற ஒரு தொற்று நோயாகும்.
  • பாதிக்கப்பட்ட மண்டலம் 5 கிலோமீட்டரிலிருந்து 2 கிலோமீட்டராகக் குறைக்கப் பட்டு உள்ளது.
  • கண்காணிப்புப் பகுதி, முன்னதாக இருந்த 5 முதல் 25 கிலோமீட்டர் வரம்பிலிருந்து தற்போது 2 முதல் 10 கிலோமீட்டர் வரை வரையறுக்கப்பட்டுள்ளது.
  • கிலாண்டர்ஸ் தொடர்பான கட்டுப்பாடுகள் தற்போது பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 10 கிலோமீட்டர் வரை மட்டுமே பொருந்தும்.
  • உள்ளூர் மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் குதிரைகளுக்கான கட்டாய மருத்துவச் சோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • நோய்த் தொற்று ஏற்பட்டவர்களை விரைவாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, தனிமைப் படுத்துதல் மற்றும் மனிதாபிமானத்துடன் கையாள்வதற்கான சீர் தர இயக்க நடைமுறைகள் நிறுவப்பட்டுள்ளன.
  • கிலாண்டர்ஸ் பர்கோல்டேரியா மல்லேயால் ஏற்படுகின்ற நோயாகும் என்பதோடு இது 2009 ஆம் ஆண்டு விலங்குகளின் தொற்று மற்றும் மோசமான நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துதல் சட்டத்தின் கீழ் அறிவிக்கத்தக்கது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்